Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னையில் அழகுபடுத்த வருகிறது ஃபேஷன் டிவி!

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் "பேஷன் டிவி". இந்நிறுவனம் நவ­நா­க­ரிக ஆடைகள், அழகு சாத­னங்கள் தொடர்­பான நிகழ்ச்­சி­களை வழங்கி வருவது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த நிலையில் சென்னை உட்பட இந்தியாவின் பல்வேறு நகரங்களில் அழகு நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக இந்­நி­று­வ­னத்தின் இந்­திய பிரிவின் தலைவர் ராஜன் மது தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "ஆரோக்­கி­ய­மான மற்றும் புதிய அழகு சாத­னங்­களில் இந்­தி­யர்­க­ள் ஆர்வமாக உள்ளனர். அதேசமயம் இந்தியர்கள் தரத்­திற்கு அதிக முக்­கி­யத்­துவம் தரு­கின்­றனர். ஆகையால் அவர்­க­ளுக்கு ஏற்ற அழகுப் பொருட்­க­ளையும், சர்­வ­தேச அளவில் புகழ் பெற்ற அழகு கலை நிபு­ணர்­களின் வழி­காட்­டு­தல்­க­ளையும் கொண்­ட­தாக ‘எப் சலோன்’களை இந்தியாவில் அமைக்க திட்டமிட்டுள்ளோம்.

டில்­லியில் ‘எப் சலோன்’ என்ற, இரண்டு அழகு நிலை­யங்­களை அமைக்க திட்­ட­மிட்­டுள்ளோம். இந்த அழகு நிலையங்களுக்கு தலா 70 லட்சம் முதல், இரண்டு கோடி ரூபாய் வரை முத­லீடு செய்யப்­படும். இந்த இரண்டு நிலை­யங்­களைத் தொடர்ந்து சென்னை, மும்பை உள்­ளிட்ட பிற நகரங்களிலும் அழகு நிலை­யங்­களை திறக்க திட்­ட­மிட்டுள்ளோம்." என்று கூறினார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close