Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரே செட்டில்மென்டில் கடனை அடைப்பேன், எங்கும் ஓடி விடமாட்டேன் - மல்லையா

கிங்ஃபிஷர் நிறுவனத்துக்குச் சொந்தக்காரரான விஜய் மல்லையா வங்கிகளிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் நாட்டை விட்டு ஓடுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.


ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, விஜய் மல்லையா வங்கிகளுக்கு வைத்துள்ள கடன் குறித்து, இந்திய கடன் வசூலிப்பு முகமையிடம் முறையிட்டுள்ளது. அதனை அடுத்து விஜய் மல்லையாவின் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வைத்திருக்கும் சொத்துக்கள் குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தது.

ஆனால் இதற்கிடையில் கடனைத் திருப்பி செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பிக்க முயற்சிப்பதாக அவர் மீது எழுந்த குற்றச்சாட்டுகளால் அவருக்கு எதிராக தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இதனையடுத்து மல்லையா தான் தற்போது வங்கிகளுடன் பேச்சு வார்த்தையில் இருப்பதாகவும், ஒரே செட்டில்மென்ட்டில் கடனை அடைப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போது கடந்த வாரம் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை கையகப்படுத்திய பிரிட்டனை சேர்ந்த டியாஜியோ நிறுவனம், விஜய் மல்லையாவுக்கு தருவதாகச் சொல்லியிருந்த ரூ. 515 கோடியையும் கடன் வசூலிப்பு முகமை  முடக்கியுள்ளது. இந்தப் பணத்தை வைத்துதான் அவர் நாட்டை விட்டு வெளியேறப் போவதாக சர்ச்சைகள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close