Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சந்தை... தொடர்ந்து 5வது நாளாக உயர்வு...!

இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று (08.03.2016) ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும் பல்வேறு எதிர்பார்ப்புகள் மத்தியில் மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,600 புள்ளிகளுக்கும் மேல் அதிகரித்து காணப்பட்டது.

அதைப்போலவே இந்த வாரமும் சந்தை அதிகரிக்குமா அல்லது மீண்டும் சந்தை இறக்கதை சந்திக்குமா என முதலீட்டாளர்கள் குழப்பத்தில் ஆழ்ந்து இருந்தனர். இந்த நிலையில் வெளிநாடுகளிலிருந்து அந்நிய முதலீடுகள் அதிகளவில் இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டதால் இன்றைய சந்தை ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகிறது.

வர்த்தகத்தைப் பொறுத்தவரை கடந்த 5 நாட்களில் சந்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 109.36 புள்ளிகள் உயர்ந்து  24,750.09 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.   தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 28.65 புள்ளிகள் உயர்ந்து   7,515.65 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.


விலை அதிகரித்த பங்குகள்


கெய்ர்ன் இந்தியா 136.85 6.79%
வேதாந்தா 91.60 4.81%
ஹிண்டால்கோ 82.80 4.28%
அதானி போர்ட்ஸ் 230.90 2.55%
கெயில் 349.35 2.45%
 
விலை குறைந்த பங்குகள்

பேங்க் ஆப் பரோடா 145.55 -2.25%
ஹெட்யூஎல் 830.55 -2.14%
பஞ்சாப் நேஷனல் வங்கி 81.50 -1.81%
எஸ்பிஐ 185.10 -1.75%
ஐசிஐசிஐ வங்கி 217.40 -1.41%

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ