Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெண் பணியாளர்கள் வீட்டிலிருந்தபடியே பணியாற்ற சலுகை; ஐசிஐசிஐ வங்கி அறிமுகம்

பெண் பணியாளர்கள் வீட்டிலிருந்தபடியே பணியாற்றும் புதிய திட்டத்தை ஐசிஐசிஐ வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான சந்தா கோச்சார் கூறுகையில், " ஏராளமான பெண்களுக்கு பணிவாய்ப்பு கிடைக்கும் சூழலிலும், மகப்பேறு, குழந்தை பராமரிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் தங்களுடைய பணியை பாதியிலேயே கைவிட்டு செல்கின்றனர்.
இத்தகைய போக்கைத் தடுத்து பெண்கள் பணியில் தொடரும் வகையில் ஐசிஐசிஐ வங்கி பெண் பணியாளார்கள் வீட்டிலிருந்தபடியே பணியாற்றும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

இதன் மூலம் பெண் பணியாளர்கள் வீட்டு வேலைகளை கவனித்துக்கொண்டே அலுவலகப் பணிகளையும் தொடரலாம். வங்கியின் பெண் ஊழியர்கள் இந்த சலுகையின் கீழ் ஓராண்டு வரையில் வீட்டிலிருந்தே பணிபுரியலாம். தேவையானால் அதன் பிறகும் நீட்டித்துக் கொள்ளலாம்" என்று கூறினார்.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ