Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏர்டெல்லில் மகப்பேறு விடுமுறை 22 வாரம்

நம் நாட்டில் தொலைத்தொடர்பு துறையில் முதலிடத்தில் உள்ள பார்தி ஏர்டெல் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு புதிய சலுகை வழங்கியுள்ளது.

ஏர்டெல் நிறுவன ஊழியர்களில் குழந்தை பிறந்த தாய்மார்களுக்கு இப்போது மகப்பேறு விடுப்பு 12 வாரமாக உள்ளது. இதை 22 வாரமாக அதிகரிக்கப்படுவதாக பாரதி ஏர்டெல் நிர்வாக இயக்குநர் கோபால் விட்டல் தெரிவித்துள்ளார். மேலும் ஆண் ஊழியர்களுக்கு குழந்தை பராமரிப்புக்காக ஒரு வாரம் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்ற சலுகையும் ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ