Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வங்கி, ரியல் எஸ்டேட் பங்குகள் வாங்கி குவிப்பு... சீற்றத்தில் சந்தை!


கடந்த ஐந்து நாட்களாக மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,600 புள்ளிகளுக்கும் மேல் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்படும் சரிவு மற்றும் முதலீட்டாளர்கள் லாபநோக்கத்தோடு பங்குகளை விற்பனை செய்ததால், இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 188.30 புள்ளிகள் சரிந்து 24,470.93 புள்ளிகளாக இருந்தது.


இதில் உலோகம், வங்கி, தகவல் தொழில்நுட்பம், நுகர்வோர் சாதனங்கள், மூலதன பொருட்கள், பொதுத்துறை நிறுவனம், எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை அதிகபட்சமாக குறைந்து காணப்பட்டது.

அதன்பின் மதியத்திற்கு பிறகு முதலீட்டாளர்கள் மூலதன பொருட்கள், மின்சாரம், ரியால்டி மற்றும் வங்கி பங்குகளை வாங்கத் தொடங்கியதால் சந்தை ஏற்றத்தில் நிறைவடைந்தது. இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் வர்த்தக முடிவில் 134.73 புள்ளிகள் உயர்ந்து 24,793.96 புள்ளிகளை அடைந்தது. நிஃப்டி குறியீடு 46.50 புள்ளிகள் உயர்ந்து 7,531.80 புள்ளிகளை அடைந்தது.
        
விலை அதிகரித்த பங்குகள்

யெஸ் பேங்க் 790.60 4.09%
டெக் மஹிந்திரா 464.15 3.41%
மாருதி சுசூகி 3,576.40 3.29%
கிராஸிம் 3,631.90 2.91%
போஷ் 17,932.95 2.82%
 
விலை குறைந்த பங்குகள்


வேதாந்தா 87.85 -2.77%
பிபிசிஎல் 799.35 -2.63%
ஹிண்டால்கோ 81.10 -2,47%
ஹெச்டிஎப்சி 1,128.65 -1,55%
அதானி போர்ட்ஸ் 226.00 -0.99%

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ