Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நவின் ஹவுஸிங் நிறுவனத்துக்கு விஸ்வகர்மா விருதுகள்

 
 தமிழ்நாட்டின்  ரியல் எஸ்டேட் டெவலப்பரான நவின்’ஸ் நிறுவனம், கட்டுமானத்தொழில் வளர்ச்சிக்குழுவால் நடத்தப்பட்ட 8-வது பதிப்பு CIDC விஸ்வகர்மா விருதுகள் 2016-ல் இரண்டு மதிப்புமிக்க விருதுகளை வென்றுள்ளது.  நவின்’ஸ் நிறுவனத்திற்கு, தொழில்முறை ரீதியில் நிர்வகிக்கப்படும் சிறந்த நிறுவனம் என்ற பிரிவிலும் (விற்றுமுதல் இந்திய ரூபாய் 100-500 கோடி) மற்றும் குரோம்பேட்டை நவின்’ஸ்-ன் ஹில்வியூ அவென்யு ப்ராஜக்ட்-க்கு சிறந்த கட்டுமானம் என்ற பிரிவிலும் இரண்டு விருதுகள் வழங்கப்பட்டன.


கட்டுமானத்தொழில் நிறுவனங்களிடையே சிறந்த தொழில் நடைமுறைகளை ஊக்குவித்துவரும் ஒரு தலைமை அமைப்பான கட்டுமானத்தொழில்வளரச்சிக்குழு (CIDC) இந்திய கட்டுமானத்தொழில் புரியும் சகோதரர்களிடையே மதிப்புமிக்க பங்களிப்புகளை அங்கீகரித்து கவுரவிக்க வேண்டும் என்ற முக்கிய நோக்கத்துடன் இந்த விருது தொடங்கப்பட்டது. கட்டுமானத்தொழிலின் சாதனையாளர்களை அங்கீகரிப்பது மற்றும் சிறந்த கட்டுமானங்கள் படைப்பதில் அவர்களுடைய பங்களிப்பை ஊக்குவிப்பது மற்றும் தேசிய வளர்ச்சியில் உதவுவதற்கு தொழிலுக்கு உயர் அளவுகோல்களை உருவாக்குவது ஆகியவை இவ்விருதுவின் நோக்கமாகும்.


நிகழ்ச்சி குறித்து கருத்து தெரிவித்த நவின்’ஸ் மேலாண்மை இயக்குநர் டாக்டர்  R. குமார் கூறுகையில், ‘‘இந்தியாவின் மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றானவற்றிலிருந்து ஒன்றல்ல, இரண்டு விருதுகளைப் பெறுவதில் நாங்கள் பெருமதிப்பும் மற்றும் பெருமகிழ்ச்சியும் அடைகிறோம். இது, கொடுக்கும் விலைக்கு மிகவும் உயர்ந்த மதிப்பை கொடுக்கக்கூடிய தரமான இல்லங்களை கட்டும் எங்களுடைய பயணத்தில் மேலுமொரு மைல்கல்லை குறிக்கிறது,’’ என்றார்.


மேடவாக்கம், குரோம்பேட்டை, அடையார், போரூர், மூலக்கடை, பெருங்குடி, காரப்பாக்கம், ஓஎம்ஆர் மற்றும் கீழ்கட்டளை போன்ற பகுதிகளில் குடியேறுவதற்கு தயார் நிலையிலுள்ள செயல்திட்டங்களை நவின்’ஸ் தற்போது மேற்கொண்டு வருகிறது. விசாகப்பட்டினத்தில், ஒரு அரிய குடியிருப்பு உருவாக்கல் திட்டமான நவீன்’ஸி-ன் பாத்ரா ஆரண்யய (மனைகள் மற்றும் வில்லாக்கள்) சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ