Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆசிய சந்தைகள் எழுச்சி... சென்செக்ஸ் மீழ்ச்சி!


இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று (11.03.2016) மாலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.


பட்ஜெட்டுக்கு பிறகு ஏற்றத்தை கண்டு வந்த பங்குச் சந்தை, சர்வதேச பொருளாதாரம் மந்தமாக இருப்பதால் சரிவை கண்டது. ஜனவரி மாதத்திற்குரிய தொழில் உற்பத்திக் குறியீடு இன்று வெளியாக இருப்பதால் முதலீட்டாளர்கள் நேற்று எச்சரிக்கையாக இருந்தனர். இந்த நிலையில் ஆசிய சந்தைகளில் எழுச்சி மற்றும் ஆயில் அண்ட் கேஸ் பங்குகள் வாங்கி குவித்ததால் இந்திய சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்தது.

இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 94.65 புள்ளிகள் உயர்ந்து  24,717.99 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 24.05 புள்ளிகள் உயர்ந்து   7,510.20 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.

விலை அதிகரித்த பங்குகள்


கெய்ர்ன் இந்தியா 146.95 4.52%
அதானி துறைமுகங்கள் 231.20 2.10%
லூபின் 1,856.15 1.93%
ஜீ என்டர்டெயின் 398.60 1.75%
ஹெச்யூஎல் 851.60 1.68%
 
விலை குறைந்த பங்குகள்


ஐடியா செல்லுலார் 102.20 -2.34%
கோடக் மகேந்திரா 642.65 -1.83%
டெக் மஹிந்திரா 458.05 -1.74%
பவர் கிரிட் கார்ப்பரேஷன் 138.20 -1.04%
வேதாந்தா 87.35 -1.02%

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ