Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கவின்கேர் எபிலிட்டி அவார்ட்: மனதில் உறுதி இருந்தால், உடல் ஊனம் தடையல்ல!



மனதில் உறுதி இருந்தால், உடல் ஊனம் ஒரு தடையல்ல; எப்படிப்பட்ட ஊனமாக இருந்தாலும், அதையும் தாண்டிவந்து  சாதனை படைக்க முடியும் என்பதை தெளிவாக எடுத்துச் சொன்னது கவின்கேர் நிறுவனம் நடத்திய 14-வது எபிலிட்டி அவார்ட் நிகழ்ச்சி.

உடல் ஊனமுற்றவர்கள் அதை ஒரு தடையாக நினைத்து தயங்கி நிற்காமல், தங்கள் மன உறுதியினால் வாழ்க்கையில் சாதனை படைத்தவர்கள் இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும் கண்டுபிடித்து, கெளரவிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறது கவின்கேர் நிறுவனம்.

கடந்த சனிக்கிழமை அன்று கவின்கேரின் 14-வது ஏபிலிட்டி விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இந்த  ஆண்டுக்கான விருது பெறுவதற்காக ஏறக்குறைய 16--க்கும் மேற்பட்ட உடல் ஊனமுற்றவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். இவர்களில் விருது பெறத் தகுதியான ஐந்து பேரை தேர்வு செய்யப்பட்டனர். பிரபல தொழிலதிபர் அருண் ஜெயின், பிரபல திரைப்பட இயக்குநர் மணி ரத்னம், சத்யபாமா பல்கலைக்கழக இயக்குநர் மரியஜுனா ஜான்சன், கஸ்தூரி அண்ட் சன்ஸ் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ராஜீவ் லோச்சன், டெய்னிக் பாஸ்கர் குழுமத்தின் தமிழ்நாடு, கேரளா கார்ப்பரேட் பிசினஸ் தலைவர் சந்தோஷ் ராதாகிருஷ்ணன், பிரபல பேஷன் போட்டோகிராபர் ஜி.வெங்கட்ராம் ஆகியோர் தேர்வு செய்தனர்.  


திருநெல்வேலியை சேர்ந்த கே.ஆர்.ராஜா, தமிழகத்தை சேர்ந்த ஜஸ்டின் ஜேசுதாஸ், கேரளா எர்ணாகுளத்தை சேர்ந்த அஞ்சன் சதீஷ், புதுடெல்லியை சேர்ந்த ஆங்குர் தர்மாவுக்கு எபிலிட்டி விருதுகள் வழங்கப்பட்டன. புதுடெல்லியை சேர்ந்த ஹெச்.பி.எஸ். அலுவாலியாவுக்கு சிறப்பு அங்கீகார விருது வழங்கப்பட்டது.

இந்த விருதினை வழங்கிப் பேசிய நடிகர் விக்ரம், ''இவர்கள் செய்த சாதனைகளைப் பார்க்கும் நான் இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது என்பதையே உணர்த்துகிறது'' என்றார்.

இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய கவின்கேர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சி.கே.ரங்கநாதன், ''ஊனமுற்றோர்கள் எப்போதும் திறமைப் புதையல்கள், பொக்கிஷங்கள்; உத்வேக ஊற்று அவர்கள். அதுபோன்ற தனித்திறமைமிக்க ஊனமுற்றவர்களிடமிருந்து நான் உத்வேகம பெற்றிருக்கிறேன். வாழ்க்கைக்கு ஒரு புதிய கண்ணோட்டத்தைப் பெற்றிருக்கிறேன். கவின்கேர் எபிலிட்டி விருதுகள் என்பது, தங்களுக்கு
உடல்குறைபாடு இருந்தபோதிலும் திறமையை அடைந்து சாதனை படைத்துள்ள ஊனமுற்றவர்களுக்கு வழங்கும் பாராட்டு ஆகும். ஒவ்வோராண்டும், நாங்கள் எங்கள் ஊடக கூட்டாளிகளின் உதவியுடன் இந்த வலையை இன்னும்
விரிவுபடுத்தி இந்த உத்வேகத்தை முன்னெடுத்துச்  செல்ல முனைந்து வருகிறோம். இந்த 14-வது கவின்கேர ; எபிலிட்டிவிருதுகள், என்னை வாழக்கையில் ஒரு புதிய பயணம் மேற்கொள்ள ஊக்குவிக்கும் உண்மையான ஒருவராக அமைந்துள்ளது” என்றார்.


எபிலிட்டி பவுன்டேஷன் நிறுவனத்தின் கௌரவ செயல் இயக்குநருமான திருமதி ஜெயஸ்ரீ ரவீந்திரன் பேசும்போது, 'நான் எப்போதும் சொல்வது போல், நாட்டில் வேறெங்கும் இருப்பதையும்விட ஊனமுற்றவர்களிடையே அதிக
வழிகாட்டும் முன்மாதிரிகள் உள்ளனர். இவர;களில் சிலரை இங்கே அடையாளம ; கண்டு அங்கீகரிப்பது என்பது எங்களுக்கு கிடைத்த ஒரு கௌரவமாகும்'' என்றார்.

கவின்கேர் பிரைவேட் லிமிடெட், பெர்சனல் கேர், உணவுகள், பால்பொருட்கள் மற்றும் பானங்கள் துறையில் பல பிரபல பிராண்டுகளைக் கொண்டிருக்கும், பன்முக செயல்பாடு கொண்ட ஒரு எஃப்.எம்.சி.ஜி. பெருநிறுவனம் ஆகும்.

எபிலிட்டி பவுன்டேஷன் தொடங்கப்பட்ட நாளிலிருந்து இருபது ஆண்டுகளாக வெற்றிகரமான பல சாதனைகளை படைத்து வருகிறது. சென்னையில் தலைமையகமாகக் கொண்டு நாடெங்கிலும் தேசிய அளவில்
ஊனமுற்றோர்கள் நலனுக்காக பணியாற்றிவருகிற ஒரு அமைப்பாகும்.

- ஆகாஷ்
படங்கள்: சரவணகுமார்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ