Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மனதில் உறுதி இருந்தால், ஊனம் ஒரு தடையல்ல

மனதில் உறுதி இருந்தால், ஊனம் ஒரு தடையல்ல; எப்படிப்பட்ட ஊனமாக இருந்தாலும், அதையும் தாண்டிவந்து சாதனை படைக்க முடியும் என்பதை இந்த உலகுக்குச் சொல்கிறார்கள் இந்த வெற்றியாளர்கள்.

திருநெல்வேலியை சேர்ந்த கே.ஆர்.ராஜா, தமிழகத்தை சேர்ந்த ஜஸ்டின் ஜேசுதாஸ், கேரளா எர்ணாகுளத்தை சேர்ந்த அஞ்சன் சதீஷ், புதுடெல்லியை சேர்ந்த ஆங்குர் தர்மா, புதுடெல்லியை சேர்ந்த ஹெச்.பி.எஸ். அலுவாலியா ஆகிய ஐந்து பேருமே தங்களுடைய குறையக் குறையாகப் பார்க்காமல், துயரங்களை எதிர்கொண்டு, சவால்களை ஏற்று இந்த இடத்திற்கு வந்திருக்கிறார்கள்.

 

இவர்களுக்கு விருது வழங்கிப் பேசிய நடிகர் விக்ரம், ''இவர்கள் செய்த சாதனைகளைப் பார்க்கும் நான் இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது என்பதையே உணர்த்துகிறது'' என்றார்.

 

 

 

 

 

 

 

 

 

ஊனமுற்றோர்களுக்கு எப்போதுமே திறமைப் புதையல்களாக, பொக்கிஷங்களாக மறைந்து கிடக்கின்றன; அவர்களின் உத்வேக ஊற்று அவர்களைத் தொடர்ந்து இயக்கிக்கொண்டிருக்கிறது. அதுபோன்ற தனித்திறமைமிக்க ஊனமுற்றவர்களிடமிருந்து நான் உத்வேகம பெற்றிருக்கிறேன் என்றார் கவின்கேர் ரங்கநாதன்.

கவின்கேரும், எபிலிட்டி பவுன்டேஷன் இணைந்து இந்த சாதனையாளர்களை விருது வழங்கி கெளரவித்துள்ளது.

படங்கள்: சரவணகுமார்

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close