Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐ.பி.ஓ. காலம்


கம்பெனிகள் பங்குகளை விற்கிறதுக்கு 3-லிருந்து 21 நாட்கள் வரை அவகாசம் கொடுக்குது செபி. முன்னாடி எல்லாம் பங்கு விற்பனை 21 நாட்களுக்கு நடக்கும். ஆனா இப்போ மூணே நாள்ல முடிச்சிக்கிடறாங்க.

யாருக்கு எவ்வளவு ஒதுக்கீடு?

ஒரு நிறுவனத்தோட பங்குகள்ல தனிநபர்கள், இந்து கூட்டுக் குடும்பத்தினர், நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்கள்னு பலரும் முதலீடு செய்யலாம். பங்கு வெளியீட்டு சமயத்துல ஒவ்வொரு பிரிவினருக்கும் இவ்வளவு சதவிகிதப் பங்குகள்னு ஒதுக்குவாங்க.

பொதுவா சிறு முதலீட்டாளர்களுக்கு 35 %, தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு 50%, நிறுவனம் சாராத முதலீட்டாளர்களுக்கு 15 % இப்படி பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படுது. அந்நிய நிதி நிறுவனங்கள் (எஃப்.ஐ.ஐ.), மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், காப்பீடு நிறு-வனங்கள் இதெல்லாம் தகுதி வாய்ந்த நிறுவனங்களின் கீழ் வரும். நிறுவனம் சாராத முதலீட்டாளர்கள்னா, தனிப்-பட்ட முறையில தங்-களுக்காக பங்குகளை வாங்கு-றவங்களைக் குறிக்கும்.

புதிய வெளியீட்டின் போது, பங்கின் விலை நிலையானதாக (ஃபிக்-ஸட்) நிர்ண யிக்கப்படுகிறதுனு வச்சுக்குவோம்... அப்போ சிறு முதலீட்டாளர்களுக்கு 50% பங்குகளைக் கொடுத்துடணும். அதுவே, ஏல முறைன்னா (புக் பில்டிங்) 35% பங்குகளை சிறு முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கிடணும்.

அதேசமயம் ஏல முறையில ஒரு நிறுவனத்தோட மொத்தப் பங்குகள்ல, 25%-க்கும் குறைவான பங்குகள் ஐ.பி.ஓ-வில் விற்பனை செய்றாங்கனு வச்சுக்குவோம்... அந்தச் சமயத்துல சிறுமுதலீட்டாளர்களுக்கு 30% மட்டும் ஒதுக்கினா போதும். இப்பல்லாம் ஃபிக்ஸட் விலையில் ஐ.பி.ஓ. வர்றது ரொம்பக் குறைஞ்சு போச்சு. ஃபிக்ஸட் முறையில பங்குகள் விற்-பனை செஞ்சாங்கன்னா சிறு முதலீட்டாளர்களுக்கு அதிக பங்-குகள் கிடைக்கும்.


(நாணயம் விகடன் எல்.கே.ஜி இணைப்பில் இருந்து)

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ