Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நீதிமன்றத் தீர்ப்பின்படி ஓலா இயற்கை எரிவாயு கார்களை இயக்க முடிவு!

ஓலா நிறுவனம் இயற்கை எரிவாயுவில் இயங்கக்கூடிய 5000 கார்களை டெல்லியில் அறிமுகப்படுத்த உள்ளது. டெல்லியில் டீசல் கார்களுக்கு தடை இருப்பதால் சிஎன்ஜி கார்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது.
இதனையடுத்து அடுத்து அடுத்த ஆறு மாதங்களில் ரூ.200 கோடி முதலீட்டில் 5000 கார்களை இயக்க உள்ளது.
 
டெல்லியில் காற்று மாசுபடுதலைத் தடுக்க வேண்டி டீசல் கார்கள் இயக்கக் கூடாது என நீதிமன்றம் அறிவித்தது. இதற்கு எதிராக டாக்ஸி நிறுவனங்கள் டீசல் கார்களை இயக்க அனுமதி வழங்க வேண்டும் என முறையீடு செய்தன. அந்த முறையீட்டை நீதிமன்றம் ரத்து செய்த பிறகு தற்போது ஓலா இந்த முடிவுக்கு வந்துள்ளது.
 
ஓலா டாக்ஸி நிறுவனம் டெல்லியின் தனது கார்களின் எண்ணிக்கையை சிஎன்ஜி கார்களை 5 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரமாக உயர்த்தப்படும் என தெரிவித்துள்ளது. 
 
இயற்கை எரிவாயுவில் இயங்கக் கூடிய கார்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது காற்று குறைந்து பசுமையாக மாறும் என ஓலா நிறுவனத்தின் சிஒஒ தெரிவித்துள்ளார்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ