Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பொதுமக்களிடம் வரவேற்பு பெறாத தங்கத் திட்டம்!

கோல்டு பாண்ட் திட்டத்தின் மூலமாக இந்த நிதியாண்டில் ரூ.15,000 கோடி திரட்ட வேண்டும் என அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால் 9 சதவிகித அளவுக்குதான் பாண்டுகளை விற்பனை செய்ய முடிந்தது. அதன் மதிப்பு ரூ.1400 கோடி மட்டும் ஆகும்.
இதுவரை மொத்தம் மூன்று முறை பாண்டுகளை மத்திய அரசு விற்பனை செய்தது. 2015 நவம்பர் மாதத்தில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது ரூ.246 கோடி அளவுக்கும், 2016 ஜனவரி மாதத்தில் ரூ.798 கோடிக்கும், மார்ச் மாதத்தில் ரூ.1050 கோடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் வெறும் ரூ.400 கோடிக்கு மட்டும்தான் முதலீடுகள் பெறப்பட்டது.
 
இந்த திட்டத்தின் கீழ் வாங்கப்படும் பாண்டுகளுக்கு 2.75 சதவிகிதம் வட்டி வழங்கப்படும். முதலீட்டு காலம் 8 ஆண்டுகள். தனிநபர் 2-500 கிராம் வரை வாங்க முடியும்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ