Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஷேர் டெக்னிக்கல் அனலிஸ்ட் ஆக மாறிவிட்டோம்..!

கோவையில் நாணயம் விகடனின் கட்டணப் பயிற்சி வகுப்பு...!


ஷேர் டெக்னிக்கல் அனலிஸ்ட் ஆக மாறிவிட்டோம்..!


நாணயம் விகடன் சார்பில் தமிழகம் முழுக்க பங்குச் சந்தை கட்டணப் பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பங்குச் சந்தை மற்றும் கமாடிட்டி - டெக்னிக்கல் அனாலிசஸ் வகுப்பு முதல் கூட்டம் சென்னையில் ஜனவரி (2016)  மாதம் நடந்தது. இரண்டாவது வகுப்பு கோவையில் மார்ச் 12 மற்றும் 13 ம் தேதி நடந்தது.


எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனத்தின்  தலைவர் தி.ரா.அருள்ராஜன் பயிற்சி அளித்தார். பொதுவாக,  டெக்னிக்கல் அனாலிசஸ் என்பது பங்கு வர்த்தகர்களுக்கானது என்றாலும், பயிற்சி வகுப்புக்கு வந்தவர்களில் சிலர் தொடர்ந்து முதலீட்டாளர்களாக இருக்க விரும்பவே, அவர்களுக்கு பங்கு முதலீட்டு உத்திகளையும் விளக்கிச் சொன்னார்.


பங்கு முதலீடு, ஸ்விங் டிரேட், டே டிரேட் இவற்றுக்கு எந்த மாதிரியான சார்ட்கள் மற்றும் பேட்டர்ன்களை பயன்படுத்த வேண்டும் என விளக்கப் படங்களுடன் விளக்கிச் சொன்னார். இதில் சிறப்பு அம்சமாக, வகுப்பில் பங்கேற்றவர்களிடமே அவர்களுக்கு பரிட்சயமான நிறுவனப் பங்குகளை சொல்லச் சொல்லி, அவை டெக்னிக்கலாக எப்படி இருக்கின்றன என்பதை விவரித்தார்.


வகுப்பில் பங்கேற்றவர்கள்,''இவ்வளவு குறைவான கட்டணத்தில், இவ்வளவு நிறைவான பயிற்சியை நாணயம் விகடனால் மட்டுமே அளிக்க முடியும். இந்த பயிற்சி வகுப்பு மூலம் கிட்டத்தட்ட நாங்கள் டெக்னிக்கல் அனலிஸ்ட் ஆகவே மாறிவிட்டோம்" என்று சந்தோஷமாக குறிப்பிட்டனர்.


சி.சரவணன்,


படங்கள்:  க.சத்தியமூர்த்தி, மாணவப் பத்திரிக்கையாளர் 


 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ