Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டியைக் குறைத்தது அரசு! கிடைக்கிற கொஞ்ச நஞ்ச வருவாயையும் குறைத்தால் எப்படி?

அரசின் சேமிப்புத் திட்டங்களுக்கு இதுவரை கொடுக்கப்பட்டு வரும் வட்டியையெல்லாம் தற்போது குறைத்து அறிவித்திருக்கிறது.

நாட்டின் பெரும்பாலான நடுத்தர மக்களின் இரண்டாவது வருவாயாக இருந்து வருபவை, தபால் நிலையம் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் செயல்பட்டு வந்த அரசு சிறு சேமிப்பு திட்டங்கள்தான். இந்த சேமிப்பு திட்டங்களில் கணிசமான வருவாய் வட்டி மூலம் கிடைத்து வந்தது.

ஆனால் சில மாதங்களாகவே அரசு இந்தச் சேமிப்பு திட்டங்களின் வட்டியைக் குறைக்க முயற்சி செய்து வந்தது. தற்போது சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டியைக் குறைத்தும் விட்டது. இதனால் பெரும்பாலான சிறு சேமிப்பாளர்களும், முதலீட்டாளர்களும் பாதிக்கப்படுவார்கள்.

 

சேமிப்பு திட்டங்கள் தற்போதைய வட்டி முந்தைய வட்டி
     
பிபிஎஃப் 8.10% 8.70%
டைம் டெபாசிட் (ஒரு வருடம் 7.10% 8.40%
டைம் டெபாசிட் (2 வருடம்) 7.20% 8.40%
டைம் டெபாசிட் (3 வருடம்) 7.40% 8.40%
டைம் டெபாசிட் (5 வருடம்) 7.90% 8.50%
தேசிய சேமிப்பு (5 வருடம்) 8.10% 8.50%
தொடர் சேமிப்பு (ஆர் டி) 7.40% 8.40%
எம்ஐஎஸ் (5 வருடம்) 7.80% 8.40%
மூத்தகுடிமக்கள் சேமிப்பு (5வருடம்) 8.60% 9.30%
கிஸான் விகாஸ் பத்ராஸ் 7.80% 8.70%
செல்வமகள் சேமிப்பு 8.60% 9.20%
     
எம்ஐஎஸ்- மாத வருவாய் சேமிப்பு திட்டம்

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ