Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரஜினியின் 2.0: ரூ. 330 கோடிக்கு இன்ஷூர் செய்து முதலிடம்

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து சங்கர் இயக்கி அடுத்த வருடம் வெளிவர இருக்கும் எந்திரன் 2.0 திரைப்படம் ரூ. 330 கோடுக்கு காப்பீடு செய்யப்பட்டு பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இந்தியாவில் மக்கள் நிறையே பேருக்கு நம் உயிருக்கும் ஆரோக்கியத்துக்குமே இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள். ஆனால் புத்திசாலிகளும், பணத்தின் மதிப்பு தெரிந்தவர்களும், இன்ஷூரன்ஸ், வரி சேமிப்பு திட்டங்கள் போன்றவற்றைத் தவறாமல் பயன்படுத்தி பணத்தை மிச்சப்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் சினிமாக்களுக்கும் இன்ஷூரன்ஸ் எடுத்து வருகிறார்கள். தற்போது இந்தியாவிலேயே ரூ. 330 கோடிக்கு இன்ஷூர் செய்யப்பட்ட படமாக ரஜினியின் 2.0 உள்ளது. இதற்கு அமீர்கான் நடித்த பிகே படத்துக்கும் ரூ. 300 கோடியில் இன்ஷூரன்ஸ் எடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ