Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஃபண்ட் மேனேஜர்களின் வருமானத்தை வெளியிட வேண்டும்: செபி உத்தரவு

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் அதன் சிஇஓ, சிஐஓ மற்றும் சிஓஓ போன்ற உயர் நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் ஃபண்ட் நிறுவனத்தின் வழியே அடையும் வருமானத்தை அந்த நிறுவனத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்று செபி உத்தரவிட்டுள்ளது.

சந்தை மீதான பயம் மற்றும் ரிஸ்க் காரணமாகத்தான் முதலீட்டாளர்கள் ஃபண்ட் நிறுவனங்களில் முதலீடு செய்கின்றனர். பெரும்பாலான முதலீட்டாளர்கள் தங்களின் முதலீடு லாபம் குறைவாக உள்ளதாகக் கருதுகிறார்கள். ஆனால் ஃபண்ட் மேனேஜர்கள் மட்டும் கொள்ளை லாபம் பார்ப்பார்கள் என்ற கருத்தும் அவர்களிடையே நிலவுகிறது.

இதற்காகவே செபி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. வரும் அக்டோபர் மாதத்திலிருந்து முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவன உயர் அதிகாரிகள், ஏஜெண்டுகளின் வருவாயைப் பார்க்க முடியும். இதன் மூலம் தங்களின் வருவாயையும் ஃபண்ட் மேனேஜர்களின் வருவாயையும் முதலீட்டாளர்கள் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ள முடியும். 

இந்த நடவடிக்கையால் ஃபண்ட் நிறுவனங்கள் முறைகேடுகளில் ஈடுபடுவது முற்றிலும் தவிர்க்கப்படும். முதலீட்டாளர்களின் நம்பகத்தன்மையும் அதிகரிக்கும்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ