Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தங்கத்துக்கு டாட்டா! மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் கலாட்டா!

நீண்ட காலத்தில் நல்ல லாபம் தரும் முதலீடுகளில் மியூச்சுவல் ஃபண்டுக்கு நிகர் எதுவுமில்லை என்பதை நாணயம் விகடன் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் தொடர்ந்து நடத்திவரும் விழிப்பு உணர்வுக் கூட்டங்கள் மூலம் முதலீட்டாளர்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர். அடிப்படை விஷயங்களைக் கற்றுக்கொண்டு விட்டோம். இனி அடுத்த கட்டத்துக்கு எங்களை அழைத்துச் செல்லுங்கள் என்கிற தெளிவோடு புதுவையில் நடந்த ‘மியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்’ ஒரு நாள் பயிற்சி வகுப்புக்கு வந்திருந்தனர் வாசகர்கள்.

 

 

 

 

 

 

 

 

 

சென்னை, திருச்சி, கோவையை அடுத்து புதுவையிலும் கடந்த மார்ச் 13 அன்று மியூச்சுவல் ஃபண்ட் ஒரு நாள் பயிற்சி வகுப்பை நடத்தியது நாணயம் விகடன். மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் சொக்கலிங்கம் பழனியப்பனை நேரில் சந்திக்கப் போகிறோம் என்கிற ஆர்வத்தில் பயிற்சிக்கு வந்திருந்தனர் முதலீட்டாளர்கள். அவர்கள் எதிர்பார்த்த ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாக எடுத்துச் சொன்னார் அவர். 

‘‘இருபது வருடத்துக்குமுன் இதுபோன்ற வகுப்புக்கு வாய்ப்பு இருந்திருந்தால் என் ஓய்வுக்காலத்துக்கு சூப்பராக சேமித்திருப்பேன்” என இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட 55 வயதுக்காரர் ஒருவர் சொன்னார். ‘‘அப்படியானால் நாங்கள் புண்ணியம் செய்தவர்கள்தான்” என 30 வயதான இரு இளைஞர்கள் தங்கள்  மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டதில் நல்ல கலகலப்பு.

‘‘ஒரு ஃபண்டை எப்படித் தேர்வு செய்வது என்பதற்கான அளவீடுகளை சொல்லியும், எது சிறந்த ஃபண்ட் என்பதற்கான நுட்பங்களை உதாரணங்களுடன் சொல்லியும் தந்தது எனக்கு புதிய தெளிவைக் கொடுத்தது” என்றார் சென்னையிலிருந்து வந்திருந்த முதலீட்டாளர் ஒருவர். 

‘‘எஃப்.டி-க்கும் மியூச்சுவல் ஃபண்டுக்கும் உள்ள மிகப் பெரிய வித்தியாசத்தை புரிந்துகொண்டோம்; எந்த தேவைக்கு, எந்த மாதிரியான ஃபண்டுகளை செலக்ட் செய்யலாம் என்பதைப் புரிந்துகொள்ள இந்த பயிற்சி வகுப்பு உதவியாக இருந்தது. எவ்வளவு பணம் கொடுத்தாலும் இதுபோன்ற வாய்ப்புக் கிடைப்பது அரிது. அலைச்சல் இல்லாமல் கிடைத்த அற்புதப் பயிற்சி’’ என்றார்கள் புதுவை முதலீட்டாளர்கள்.

பயிற்சி வகுப்பில் ஹைலைட்டான விஷயம் பயிற்சிக்கு வந்திருந்த பெண்கள் கேட்ட கேள்விகள்தான். ‘‘இனி தேவை இல்லாமல் தங்கத்தை வாங்கி பீரோவில் வைக்க மாட்டேன்” என்றார் ஒரு பெண்மணி. அவரது பேச்சை உன்னிப்பாக கவனித்த பலரும் தங்கத்துக்கு டாட்டா சொல்லிவிட்டு, ஃபண்ட் முதலீட்டு பக்கம் பார்வையைத் திருப்புவார்கள் என்பது நிச்சயம்.
 

கா.முத்துசூரியா, 
படங்கள்: தே.சிலம்பரசன் 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ