Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வெளிநாட்டு வங்கிகளில் கணக்குத் துவங்க முடியுமா?


     ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன்  பன்னாட்டு வரி ஆலோசகர், கோவை


குடியாத்தம் வேலூர் நகரை சேர்ந்த குணசேகரன் கிருஷ்ணன் கம்ப்யூட்டர் சம்பந்தமான பொருட்களை பெரிய கம்பெனிகளுக்கு விற்பனை செய்து வருபவர்.


தென் இந்தியாவின் பல நகரங்களில் தனது கம்ப்யூட்டர் நிறுவனத்தின் கிளைகளை நடத்தி வருகிறார். தனது வியாபாரத்திற்கு தேவையான மூலப்பொருட்களை இந்தியாவின் பெரு நகரங்களிலிருந்து கொள்முதல் செய்து வருபவர், அவரது மனைவி தாரணியின் அறிவுரைப்படி நிதி சம்பந்தமான முடிவுகளை எடுத்து வருபவர். 


இந்தியாவில் மட்டும் இல்லாமல் பல நாடுகளில் இருந்து கம்ப்யூட்டர் உபரி பொருட்கள், நெட்வொர்க் சம்பந்தமான பொருட்களை தருவித்து இந்தியாவில் உள்ள பல முன்னணி கம்பெனிகளை தமது வாடிக்கையாளராக வைத்துள்ளார். பல நகரங்களில் தனது கிளைகளை வைத்திருப்பதால் குணா அடிக்கடி பல ஊர்களுக்கு சென்று வருபவர். இதனால் இவருக்கு மார்க்கெட் நிலவரம் அத்துப்படி.


இவர் சில நாடுகளில் இருந்து இறக்குமதியும் செய்து வருவதால் வெளிநாட்டில் வரவு செலவுகளில் அனுபவம் பெற்றவர். தற்போது இறக்குமதிக்கான தொகையை இந்தியாவில் இருந்து கொடுத்து வருகிறார். இதற்கு பதிலாக வெளிநாட்டில் உள்ள வங்கிகளில் கணக்கை துவங்கினால் அதனால் சில சவுகரியங்கள் ஏற்படும் என்று சிலர் அறிவுரை கூறியதால் அதற்கான முயற்சிகளை செய்ய தொடங்கினார்.

வெளிநாடுகளில் வங்கி கணக்குகளை ஆரம்பித்து, அந்த நாட்டில் உள்ள விற்பனையாளர்களுக்கு தேவையான பணத்தை அந்த வங்கி கணக்கின் மூலமாக கொடுக்கலாம் என்று ஆராய்ந்த போது வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு ஆரம்பிப்பது சுலபமா, சாத்தியமா, என்று ஒரு கேள்வி எழுந்தது. அதை அவரது ஆடிட்டரிடம் கேட்ட போது பதில்கள் கிடைத்தன:


அந்நிய செலாவணி சட்டப்படி, இந்திய குடிமக்கள் வெளிநாட்டு வங்கிகளில் கணக்குகளை துவங்க முடியும். ஆனால், அதற்கு சில வரைமுறைகள் உள்ளன. கீழ்க்கண்ட நபர்கள் வங்கி கணக்கை எந்தவித முன் அனுமதி இல்லாமல் துவங்கலாம்.


 •    ஏற்றுமதியாளர் வெளிநாட்டில் ஒப்படைப்பு (Turn Key project) முறையில் கட்டுமான துறையில் ஈடுபட்டு இருந்தால்,
 •    இந்தியாவில் இந்திய நிறுவனம் அல்லது கம்பெனி வெளிநாட்டில் கிளை அலுவலகம் திறக்கும்பட்சத்தில்,
 •    தாராளமயமாக்கப்பட்ட வெளிநாட்டுக்கு அனுப்பும் பணத் திட்டத்தின்படி (Liberalized Remittance Scheme) அனுப்பும்பட்சத்தில்
 •    வெளிநாட்டில் கண்காட்சி (Exhibition) அல்லது வர்த்தக கண்காட்சி (Trade fare) அதில் பங்குபெற செல்பவர்கள்.
 •    வெளிநாட்டில் படிப்பிற்காக செல்பவர்கள்.
 •    வெளிநாட்டில் சென்று சம்பாதிக்கும் பணத்தை இங்கே இந்தியாவிற்கு கொண்டு வருபவர்கள்
 •    வேலைக்காக வெளிநாடு செல்லும் இந்திய குடிமக்கள்.


மேல்கூறிய நபர்கள், வெளிநாட்டில் தனது வங்கி கணக்கை ஆரம்பிக்க முடியும். இதற்கு ரிசர்வ் வங்கியின் முன் அனுமதி இல்லாமல் வங்கி கணக்கை ஆரம்பிக்க முடியும்.


இந்தப் பிரிவின் படி “குணா” தனது வெளிநாட்டு வங்கிக் கணக்கை ஆரம்பிக்க முடியும்.
 karthikeyan.auditor@gmail.com      
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ