Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வட்டி விகிதம் எதிர்பார்ப்பு... சென்செக்ஸ் அதிகரிப்பு!

வாரத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கி வர்த்தகமானது.
கச்சா எண்ணெய் விலை குறைவு காரணமாக ஆசிய சந்தைகள் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் நிலையிலும் இந்திய பங்குச்சந்தைகள் நம்பிக்கையுடன் வர்த்தகத்தை துவக்கின.

இன்றைய வர்த்தகத்தில் அசோக் லேலாண்ட் பங்கின் விலை புதிய உச்சத்தை அடைந்துள்ளது. அதாவது இன்றைய வர்த்தகத்தில் என் எஸ்இ எக்ஸ்சேஞ்சில் 4 சதவிகிதம் விலை உயர்ந்து ரூ,104க்கு வர்த்தகமாகி வருகிறது. டிரேங் வால்யூம் அதிகரித்துள்ளது. அதாவது என் எஸ் இ மற்றும் பி எஸ்இ எக்ஸ்சேஞ்சில் 11.36 மில்லியன் அளவுக்கு வர்த்தகம் நடந்துள்ளது.

இன்றைய வர்த்தகத்தில் ஆர்பிஐ வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற நம்பிக்கையில் பங்கு சந்தை உயர்ந்து காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 332.63 புள்ளிகள் உயர்ந்து  25,285.37 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி  99.90 புள்ளிகள் உயர்ந்து  7704.25 என்ற நிலையில் வர்த்தகமானது     

விலை அதிகரித்த பங்குகள்

அம்புஜா சிமென்ட்ஸ் 231.95 4.46%
அல்ட்ராடெக் சிமெண்ட் 3,229.50 3.82%
ஹெச்யூஎல் 879.65 3.69%
போஷ் 19,350.75 3.07%
எஸ்பிஐ 196.80 2.90%

விலை குறைந்த பங்குகள்

ஏஷியன் பெயின்ட்ஸ் 859.65 -1.79%
பி.எச்.இ.எல் 111.95 -1,28%
லூபின் 1,535.20 -1.24%
ஹீரோ மோட்டோகார்ப் 2,799.60 -1,11%
டெக் மஹிந்திரா 490.10 -0.48%

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ