Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தபால் அலுவலக திட்டங்கள்: மார்ச் 31 க்குள் முதலீடு செய்தால் அதிக வட்டி..!


சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதக் குறைவு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதனால் இந்த மாதம்  (மார்ச்) 31-ம் தேதிக்குள் தொடங்கப்படும் கணக்குகளுக்கு இப்போதுள்ள அதிக  வட்டி  வழங்கப்படும் என தபால் துறை அறிவித்துள்ளது. 


சென்னை மண்டல தபால் துறைத் தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் " தற்போது மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்துக்கு 9.3 சதவிகிதமும், செல்வ மகள் சேமிப்பு திட்டத்துக்கு 9.2% சதவிகிதமும்,  மாத வருவாய் திட்டத்துக்கு, தொடர் வைப்பு நிதி திட்டத்துக்கு 8.4 சதவிகிதமும், கால வைப்புகளுக்கு 8.4 மற்றும் 8.5 சதவிகிதமும், தேசிய சேமிப்புத் திட்டங்களுக்கு 8.5 சதவிகிதமும், கிஸான் விகாஸ் பத்திரங்களுக்கு 8.7 சதவிகித வட்டி வழங்கப்படுகிறது.

ஏப்ரல் 1 முதல் இந்த வட்டி  குறைக்கப்படுகிறது. உதாரணத்துக்கு   ஏப்ரல் 1 முதல் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் மற்றும் செல்வ மகள் சேமிப்பு திட்டத்துக்கு  தலா 8.6 சதவிகிதம்தான் வட்டி வழங்கப்படும். மார்ச் 31, 2016 க்குள் இந்த திட்டங்களில் முதலீடு செய்தால் அதிக வட்டி வருவாயை ஈட்ட முடியும். அதாவது, இந்தத் திட்டங்களின் முதிர்வு காலம் வரை தற்போதுள்ள அதிக வட்டி வழங்கப்படும்.
பொது மக்கள் தபால் துறையில் சேமிப்புக் கணக்குகளை தொடங்க சிறப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட தபால் அலுவலகங்களில் சேமிப்புக் கணக்கைத் தொடங்க மார்ச் 27-ம் தேதி சிறப்புக் கவுண்ட்டர்கள் அமைக்கப்படும்.

எந்த தபால் அலுவலகத்தில் சிறப்பு கவுண்ட்டர்கள் திறக்கப்படும் என்பது குறித்து  www.chennaipost.gov.in என்ற இணைய தளத்துக்கு சென்று பார்க்கலாம் " என்றார்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ