Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சாதிக்க நினைப்பவர்களுக்கு தடை என்று ஏதுமில்லை!

இந்தியத் தொழிலகங்கள் கூட்டமைப்பின் தென் பிராந்திய இயக்ககத்தின் "வளரும் தொழிலதிபர் விருதுகள்" வழங்கும் விழா நேற்று சென்னை ஐடிசி கிராண்ட் சோழாவில் நடைபெற்றது.

இதில் வளரும் தொழிலதிபர்களாக அடையாளம் காணப்பட்டு விருது வழங்கப்பட்ட மூன்று பேரும் அசாத்தியமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஶ்ரீகாந்த் போலா, மாற்றுத் திறனாளியான இவர் பேக்கேஜ் செய்யப் பயன்படுத்தும் பேப்பர் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். தன் குறையைக் கண்டு கவலைப்படாமல் துணிந்து தொழில் செய்து தற்போது 450க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்துள்ளார். அதில் பெரும்பாலானோர் மாற்றுத்திறனாளிகள்.
சுந்தரம், ரப்பர் பொருட்களைத் தயாரித்துக் கொண்டிருந்தவர் இன்று இந்திய விமானங்களின் காக்பிட் சீல்களைத் தயாரிக்கும் நிறுவனத்தை உருவாக்கி இருக்கிறார். இந்த உயரத்தை அடைய இவர் பல ஆண்டுகள் பல பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. அந்த சவால்களை வென்று வெற்றி பெற்றுள்ளார்.

ஹாஜா புன்யாமின், 6ம் வகுப்புக்கு மேல் படிக்க வசதியில்லாத இவர் தெருக்களில் சமோசா விற்க ஆரம்பித்தவர். தற்போது 'ரெடி டு ஈட்'  உணவுப் பொருட்களைத் தயாரித்து ஸ்டார் ஓட்டல்களுக்கும், விமானங்களுக்கும் சப்ளை செய்து வருகிறார்.

இந்த மூவரின் வெற்றிப் பயணத்தைப் பாராட்டும் வகையிலும், புதிய இளம் தொழிலதிபர்களை ஊக்குவிக்கும் விதத்திலும் இந்த விருது வழங்கும் விழா அமைந்தது.

இதில், எம்ஆர்எஃப் டயர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் கே.எம்.மாமென், இந்தியத் தொழிலகங்கள் கூட்டமைப்பின் தென் பிராந்திய தலைவர் ராஜஶ்ரீபதி, முன்னாள் தென் பிராந்திய தலைவர் நவாஸ் மீரன், துணைத் தலைவர் ஷோபனா காமினேனி ஆகியோர் வெற்றியாளர்களை விருது வழங்கி கெளரவித்துப் பேசினர்.

படம்: ஜே. வேங்கடராஜ்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ