Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வட்டி விகிதம் எதிர்பார்ப்பு... சரிவிலிருந்து மீண்ட சந்தை!


இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றுன் சரிவுடன் துவங்கின. இன்று காலைநேர வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 102 புள்ளிகள் சரிந்து காணப்பட்டது.
கடந்த மூன்று நாள் வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் குறியீடு 653 புள்ளிகளாக அதிகரித்து இருந்தது. இன்று சென்செக்ஸ் 101.74 புள்ளிகள் சரிந்து 25,228.75 புள்ளிகளாக இருந்தது.

ஆசியா உள்ளிட்ட உலகளவில் பங்குச்சந்தைகள் சரிவுடன் இருப்பதாலும், முதலீட்டாளர்கள் லாபநோக்கத்தோடு பங்குகளை விற்பனை செய்ததாலும் இன்றைய வர்த்தகம் சரிவுடன் காணப்பட்டது. ஹோலி மற்றும் புனித வெள்ளியை முன்னிட்டு நாளை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு நாட்களுக்கு பங்குச்சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்தனர். இதனால் சந்தை சற்று சரிவில் காணப்பட்டது. எனினும் ஏப்ரல் 5 ம் தேதி நடைபெறும் நிதி கொள்கை ஆய்வு கூட்டத்தில் வட்டி விகிதம் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு காரணமாக சந்தை முடிவின்போது சந்தை ஏற்றத்தில் முடிவடைந்தது. கடந்த 4 வாரமாக சந்தை தொடர்ச்சியாக அதிகரித்து காணப்படுகிறது.

இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 7.07 புள்ளிகள் உயர்ந்து  25,337.56 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி  1.60 புள்ளிகள் உயர்ந்து  7716.50 என்ற நிலையில் வர்த்தகமானது   

விலை அதிகரித்த பங்குகள்

ஹிண்டால்கோ 91.30 4.94%
ஐடியா செல்லுலார் 104.95 2.84%
டாடா ஸ்டீல் 317.20 2.39%
பார்தி ஏர்டெல் 358.20 2.08%
யெஸ் பேங்க் 849.25 2.05%

விலை குறைந்த பங்குகள்

ரிலையன்ஸ் 1,029.20 -1.78%
பேங்க் ஆப் பரோடா 144.00 -1.71%
லூபின் 1,524.15 -1.61%
பஞ்சாப் நேஷனல் வங்கி 84.70 -1.45%
கெயில் 356.10 -1.37%

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ