Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இப்ப 10 கோடி... அடுத்தது 16 கோடி; இது ஸ்மார்ட்போன் விற்பனை கணக்கு!

நடப்பு 2015-16ம் நிதி ஆண்டில் 10 கோடிக்கு மேல் ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகும். 2016-17ம் நிதி ஆண்டில் 16 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகும் என்று அசோசேம் மதிப்பிட்டுள்ளது.


ஸ்மார்ட்போன்களின் விலை குறைந்துவரும் சூழலால் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 2012-13-ம் நிதி ஆண்டில் 4.4 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டன. ஆனால் அடுத்த மூன்று ஆண்டுகளில் விற்பனை இரு மடங்குக்கு மேல் உயர்ந்திருக்கிறது.

ஸ்மார்ட்போன் விற்பனையில் விலை குறைவான ஸ்மார்ட் போன்கள் அதிகம் விற்பனையாகின்றன. மொத்த ஸ்மார்ட்போன் விற்பனையில் ரூ.4,000 ரூபாய் முதல் ரூ.10,000 வரை உள்ள ஸ்மார்ட்போன்களின் பங்கு 78 சதவிகிதமாக உள்ளது. ஸ்மார்ட்போன் விற்பனை அதிகமாக இருப்பதால் டிஜிட்டல் கேமிரா விற்பனை கடந்த ஒரு வருடத்தில் 35 சதவிகிதம் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ