Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

1 தடம். 2 தடம்.. 3 தடம்... விஜய் மல்லையாவின் சொகுசு விமானம் ஏலம்

 
விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான சொகுசு விமானம் மே 12-ம் தேதி ஏலம் விடப்பட உள்ளது.
 
 
 
விஜய் மல்லையாவின் ஜெட் ஏர்பஸ் 319 ரக விமானம் பல ஆடம்பர அம்சங்களைக் கொண்டது. இந்த விமானம் தற்போது மும்பை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இதில் 25 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் பயணிக்க முடியும். மிகவும் சொகுசாக இந்த விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தை வீடு மற்றும் அலுவலகமாக விஜய் மல்லையா பயன்படுத்தி வந்தார்.
 
இந்த ஜெட் ஏர்பஸ் 319 ரக விமானம் மிகவும் விலை உயர்ந்த ஆடம்பர ஜெட் விமானங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதன் விலை ரூ.266 கோடியாகும். இதில் கருத்தரங்க அறை, படுக்கை அறை, குளியல் அறை என அனைத்து அம்சங்களும் உள்ளன. 
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ