Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அட ஆமாங்க ஆமா... கார்ப்பரேட்டில் பெண் வக்கீல்களுக்கு நல்ல காலம் பொறந்தாச்சு..!


ஆண்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் எந்த ஒரு துறையாக இருந்தாலும் அதில் பெண்கள் நுழைவது மகிழ்ச்சியான விஷயமே. ஆனாலும், இந்திய நிறுவனங்களில் சட்டம் தொடர்பான எந்த ஒரு பணிக்கும் பெண்கள் பணியமர்த்தப்படாமலே இருந்தனர். ஆனால், இந்த நிலை இப்போது அடியோடு மாறியுள்ளது.


முந்தைய ஆண்டைவிட கடந்த 12 மாதங்களில் பெண் வக்கீல்களின் தேவை 15 முதல் 30 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. க்ராம்டன் கிரீவ்ஸ், சிட்டி, மான்டில்ஜ், கார்ல்சன் ரெசிடர், பிரமல் மற்றும் ஜிஇ போன்ற முன்னணி நிறுவனங்கள்  பெண் வக்கீல்களை பணியமர்த்த அதிக கவனம் செலுத்தி வருகின்றன.

இதுமட்டும் இல்லாமல் பல முன்னணி நிறுவனங்கள் பெண் வக்கீல்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளன. ஆக இனி கார்ப்பரேட் நிறுவனங்களில் பெண் வக்கீல்களுக்கு நல்ல காலம் பொறந்தாச்சு!

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ