Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உலகின் மிகச்சிறந்த தலைவர்கள் பட்டியல்: இந்தியா சார்பில் தேர்வான ஒரே தலைவர்? மோடியும் இல்லை... லேடியும் இல்லை!

"உலகின் மிகச்சிறந்த தலைவர்கள்" என்று 50 பேர் கொண்ட பெயர் பட்டியல் ஒன்றை ஃபார்ட்சூன் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியா சார்பில் ஒருத்தர் மட்டுமே இடம் பெற்றுள்ளார்.


 


”உலகின் சிறந்த 50 தலைவர்கள்” பட்டியலில் உலகம் முழுவதும் உள்ள தொழில் அதிபர்கள், அரசியல் தலைவர்கள் என பல தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் இந்தியா சார்பில், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் 42வது இடத்தை பிடித்துள்ளார். இந்தியா சார்பில் தேர்வான ஒரே தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்தான் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த பட்டியலில் அமேசான் நிறுவன சீ இ ஓ ஜெப் பேஸாஸ் முதலிடத்தை பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தில் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலோ மெர்க்கல்லும், மியான்மர் ஜனநாயக தலைவர் ஆங் சான் சூகி 3 வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ