Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒரே நாளில் நிறு­வ­னங்கள் பதிவு; புதிய வசதி அறி­முகம்

அன்­னிய முத­லீ­டு­களை அதிக அளவில் ஈர்க்கும் நோக்கில், தொழில் தொடங்குவதற்கான நடை­மு­றைகளை மத்­திய அரசு எளிதாக்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக கம்­பெனிகள் சட்­டத்தின் கீழ், நிறு­வ­னங்­களை பதிவு செய்­வ­தற்­கான வழி­மு­றையை, ஒரே குடையின் கீழ், மத்­திய அரசு கொண்டு வந்­து உள்­ளது.

இதற்­காக, மத்­திய நிறு­வன விவ­கா­ரங்கள் அமைச்­சகம், சி.ஆர்.சி., எனப்­படும், மத்­திய பதிவு மையம் என்ற அமைப்பை உரு­வாக்­கி­யுள்­ளது. இந்த அமைப்பு, வலை­தளம் வாயி­லாக வரும் அனைத்து விண்­ணப்­பங்­க­ளையும் பரி­சீ­லித்து, நிறு­வ­னங்­களை பதிவு செய்து தரும் பணியை மேற்­கொள்ளும்.

இன்று முதல் அம­லுக்கு வரும் இந்த நடை­மு­றையால், ஒரு நிறு­வனம், கம்­பெ­னிகள் சட்­டத்தின் கீழ், உரிய விதி­மு­றை­களை பின்­பற்றி வலை­த­ளத்தில் விண்­ணப்­பித்தால், 24 மணி நேரத்தில் அது தொடர்­பான பரி­சீ­லனை முடி­வ­டைந்து, மறுநாள் பதிவு சான்­றிதழ் பெற்று விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ