Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐ.டி.பி.ஐ வங்கி ஊழியர்கள் இன்று முதல் 4 நாட்கள் வேலைநிறுத்தம்!

ஐ.டி.பி.ஐ வங்கியில் தனியார் முதலீட்டை அதிகரிக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து, ஐ.டி.பி.ஐ வங்கியின் ஊழியர் இன்று முதல் 4 நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

முன்னதாக, மத்திய பட்ஜெட் தாக்கலின்போது, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பேசியபோது, "ஐடிபிஐ வங்கியில் மத்திய அரசு வைத்துள்ள 80 சதவீதப் பங்கை 50 சதவீதத்துக்கும் கீழ் குறைத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது' என்று தெரிவித்திருந்தார். மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த வங்கி ஊழியர்கள் நாடுதழுவிய வேலைநிறுத்தத்தில் இன்று (மார்ச் 28) ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். இன்று (திங்கள்கிழமை) முதல் வியாழக்கிழமை வரை 4 நாள்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள ஐடிபிஐ வங்கியில் 17,500 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்துவதற்கு அந்த மாநில நீதிமன்றம் தடை விதித்திருப்பதால், அந்த மாநிலத்தைத் தவிர்த்து நாடு முழுவதும் ஐடிபிஐ வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ