Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கூகுளின் "க்ரோம் ஆப் லான்ச்சருக்கு" மூடுவிழா..!

அண்மைக்காலமாக கூகுள் தனது தேவையில்லாத சேவைகளை நிறுத்திக்கொண்டு வருகிறது. இந்த நிலையில்  டெஸ்க்டாப் ஆப்களை வேகமாக இயக்க பயன்பட்டு வரும் "க்ரோம் ஆப் லான்ச்சரை" கூகுள் நிறுத்துகிறது.

க்ரோம் ஆப் லான்ச்சரில் பல சேவைகள் பொதிந்து இருப்பதை பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. இதற்கு இப்போது மிக சொற்பமான பயன்பாட்டாளர்களே உள்ளனர். பெரும்பாலோனோர் க்ரோம் பிரவுஸரிலேயே ஆப்களை பயன்படுத்த விரும்புவதால், க்ரோம் லான்ச்சர் சேவையை நிறுத்த கூகுள் முடிவு செய்துள்ளது கூகுள். ஜூலை மாதம் சேவை முழுமையாக நிறுத்தப்படும் என்று தெரிகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ