Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கடனை திருப்பி செலுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை! மல்லையாவுக்கு அருண் ஜெட்லி எச்சரிக்கை

விஜய் மல்லையா போல் வேண்டும் என்றே கடனை திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

தனிநபர் வழக்குகளில் நான் கருத்து கூறுவதில்லை. ஆனால், வங்கிகளில் பணத்தை திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்துள்ள விஜய் மல்லையா போன்ற தொழிலதிபர்கள் தாங்கள் செலுத்த வேண்டிய கடன் பாக்கிகளை கவுரமான முறையில் திருப்பிச் செலுத்துவதே நல்லது. கவுரமாக வங்கிகளுக்கு வழங்க வேண்டிய கடனை திருப்பி செலுத்தி விடுங்கள் அல்லது கடும் நடவடிக்கையை சந்திக்க வேண்டி வரும் என்று அருண் ஜெட்லி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ