Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிறு சேமிப்பு திட்டம்: மேற்கு வங்கம் முதலிடம்! தமிழகம்..?

நம் நாட்டில் சிறு சேமிப்பு திட்டங்களில் மேற்கொள்ளப்படும் முதலீட்டில் மேற்கு வங்க மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

மத்திய அரசு பெரும்பாலான சிறு சேமிப்புத் திட்டங்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை அண்மையில் குறைத்துள்ளது. இந்த திருத்தியமைக்கப்டப்ட வட்டி விகிதம் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இந்த நிலையில் 2014-15-ம் நிதி ஆண்டில் மாநிலம் வாரியாக சிறு சேமிப்பு திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் ரூ.32,713 கோடி முதலீட்டுடன் மேற்கு வங்க மாநிலம் முதலிடத்தில் உள்ளது. 

இதற்கு அடுத்தப்படியாக உத்தரபிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா ஆந்திர பிரதேசம் மற்றும் பஞ்சாப் போன்ற மாநிலங்கள் உள்ளன. சிறு சேமிப்பு திட்டங்களில் ரூ.11,048 கோடி முதலீட்டுடன் தமிழகம் ஏழாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ