Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எக்னாமிக் டேட்டா, டெரிவேடிவால் இந்திய சந்தை தடுமாற்றம்!

வர்த்தகத்தின் முதல் நாளான இன்று பங்குச்சந்தை இறக்கத்துடன் நிறைவடைந்தது.  கடந்த வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை அன்று ஹோலி மற்றும் புனித வெள்ளியை முன்னிட்டு பங்குச்சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
 
 
இதனால் இந்திய சந்தை கடந்த 4 நாட்களாக தொடர் விடுமுறையுடன் இருந்தது. இந்த நிலையில் இன்று சந்தைகள் கடந்த 5 வாரங்களில் இல்லாத அளவு இறக்கத்துடன் நிறைவடைந்தது.
 
முதலீட்டாளர்கள் லாபத்துடன் பங்குகளை விற்பனை, அமெரிக்காவில் எக்னாமிக் டேட்டா வெளியீடு மற்றும் டெரிவேடிவ் சந்தை நிறைவு போன்ற காரணங்களால் இன்றைய சந்தை இறக்கத்துடன் நிறைவடைந்தது.
 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 371.16 புள்ளிகள் சரிந்து  24,966.40 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி  101.40 புள்ளிகள் உயர்ந்து  7615.10 என்ற நிலையில் வர்த்தகமானது   

விலை அதிகரித்த பங்குகள்

கோடக் மகேந்திரா 669.60 1.46%
என்டிபிசி 129.15 1.41%
பவர் கிரிட் கார்ப்பரேஷன் 139.10 1.20%
போஷ் 20,447.05 1.14%
அம்புஜா சிமென்ட்ஸ் 229.70 0.64%

விலை குறைந்த பங்குகள்

வேதாந்தா 87.95 -9.19%
ஹிண்டால்கோ 83.25 -8.82%
டாடா ஸ்டீல் 299.15 -5.69%
சன் பார்மா 809.25 -4.37%
எஸ்பிஐ 188.30 -4.22%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close