Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 104 கோடியை தாண்டியது!

நம் நாட்டில் தொலைத் தொடர்பு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 104.32 கோடியாக அதிகரித்துள்ளதாக இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.

கடந்த ஜனவரி மாத இறுதி நிலவரப்படி, நாட்டின் தொலைத் தொடர்பு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 104.32 கோடியாகும். மாதந்தோறும் 0.66 சதவிகித வளர்ச்சி என்கிற விகிதத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஜனவரி மாதத்தில் மட்டும் 70.8 லட்சம் புதிய மொபைல் வாடிக்கையாளர்கள் இணைப்பு பெற்றனர். இத்துடன் நாட்டின் மொபைல் இணைப்புகள் எண்ணிக்கை 101.79 கோடியாக உள்ளது.
புதிய வாடிக்கையாளர்களைப் பொறுத்தவரை ஏர்டெல் 25 லட்சம் பேரையும், ஐடியா 12.51 லட்சம் பேரையும், வோடஃபோன் 11.12 லட்சம் பேரையும் புதிய இணைப்புகளாக பெற்றன. இதில் 9.25 லட்சம் புதிய வாடிக்கையாளர்களைப் பெற்று, நாட்டில் 4-ஆம் இடத்தில் பி.எஸ்.என்.எல். உள்ளது. நாட்டில் மொத்தம் 101.79 கோடி மொபைல் வாடிக்கையாளர்கள் இருந்தாலும், 91.76 கோடி இணைப்புகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன என்று டிராய் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ