Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

4 ஆயிரம் கோடி திருப்பி செலுத்த தயார்! விஜய் மல்லையா அறிவிப்பு


விஜய் மல்லையாவிடம் இருந்து கடன்தொகையை திரும்பப் பெறுவது தொடர்பாக அவருக்கு கடன் அளித்த அனைத்து வங்கிகளும் ஒன்றாக சேர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தன. இந்த நிலையில், கடன்தொகையை செலுத்த முடியாமல் இருக்கும் விஜய் மல்லையா சார்பில் இன்று சுப்ரீம் கோர்ட்டில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.


அந்த அறிக்கையில் வரும் செப்டம்பர் மாதத்துக்குள் கடன் அளித்த வங்கிகளுக்கு 4 ஆயிரம் கோடி ரூபாயை வழங்க விஜய் மல்லையா முன்வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, ஒருவாரத்துக்குள் பரிசீலித்து முடிவுசெய்யும்படி அவருக்கு கடன் அளித்த வங்கிகளை சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது. மேற்படி வழக்கின் மறுவிசாரணையை வரும் ஏப்ரல் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close