Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

செயல்படாத நிலையில் உள்ள இபிஎப் கணக்குக்கு வட்டி! மத்திய அரசு அதிரடி

செயல்படாத நிலையில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு வட்டி அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

வேலையிலிருந்து விலகிய தொழிலாளர்கள், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎப்) கணக்குகளை செயல்படாத நிலையில் வைத்துள்ளனர். இதை புதிய செயல்படும் கணக்குகளுக்கு மாற்றிக் கொள்ள ஊக்கப்படுத்தும் முயற்சியாக ஏப்ரல் 1 ம் தேதி முதல் வட்டி அளிக்க இபிஎப் ஆணையம் முன்வந்துள்ளது. இவ்வாறு வட்டி அளிக்க முடிவெடுத்துள்ள இபிஎப் கணக்கில் தொடர்ந்து 36 மாதங்கள் ஊழியர்கள் அல்லது நிறுவனங்கள் பங்களிப்பு செலுத்தாமல் இருக்க வேண்டும்.

இபிஎப் ஆணையத்தின் இந்த நடவடிக்கையால் 9 கோடிக்கும் அதிகமான பேர் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செயல்படாத நிலையில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்குகளில் ரூ.32,000 கோடி வரை டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ