Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

5 காரணங்களால் சென்செக்ஸ் சரவெடி..!


இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (30.03.16) மாலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.

இந்திய ரிசர்வ் வங்கி வரும் ஏப்ரல் 5 ம் தேதி நடைபெறும் நிதிக்கொள்கை ஆய்வுக்கூட்டத்தில் வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு, ஸ்டீல் பங்குகளை முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் வாங்கி குவிப்பு, ஆசிய சந்தை, ஐரோப்பா சந்தை உட்பட சர்வதேச சந்தைகள் இன்று உயர்ந்து வர்த்தகம், அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு மற்றும்   அடுத்த மாதம் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் ஜிஎஸ்டி மசோதா அமல்படுத்தப்படும் என்ற எதிர்பார்பின் காரணமாக இன்றைய பங்குச்சந்தை அதிகரித்து காணப்பட்டது.

இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 438.12 புள்ளிகள் உயர்ந்து  25,338.58 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 138.20 புள்ளிகள் உயர்ந்து  7735.20 என்ற நிலையில் வர்த்தகமானது 

விலை அதிகரித்த பங்குகள்

டாடா ஸ்டீல் 324.30 6.73%
ஐசிஐசிஐ வங்கி 237.50 6.31%
லூபின் 1,475.30 5.26%
பேங்க் ஆப் பரோடா 147.05 4.77%
வேதாந்தா 91.65 4.50%

விலை குறைந்த பங்குகள்

ஜீ எண்டர்டெயின் 376,55 -1,40
எம் அண்ட் எம் 1,219.75 -1,01%
ஹெச்டிஎப்சி 1,115.30 -0,93%
பார்தி ஏர்டெல் 353,80 -0,20%
மாருதி சுசூகி 3,727.45 -0,07%

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ