Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்டீல் ஆலையை விற்கிறது டாடா! 15,000 பேர் வேலையிழக்கும் அபாயம்

இங்கிலாந்தில் உள்ள டாடா ஸ்டீல் ஆலை தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவதால் அங்கிருந்து முழுவதுமாக வெளியேற டாடா ஸ்டீல் திட்டமிட்டுள்ளது.

2007-ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள கோரஸ் நிறுவனத்தை டாடா ஸ்டீல் வாங்கியது. 810 கோடி டாலருக்கு இந்த நிறுவனம் வாங்கப்பட்டது. ஆனால் வாங்கியதில் இருந்து இந்த நிறுவனம் லாபம் ஈட்டவில்லை. அதனால் 9 வருடங்களுக்கு பிறகு இந்த நிறுவனத்தை விற்க டாடா ஸ்டீல் முடிவெடுத்திருக்கிறது.

உலகின் மிகப்பெரிய ஸ்டீல் உற்பத்தி செய்யும் நிறுவனமான டாடா ஸ்டீல் இங்கிலாந்தில் உள்ள தனது ஆலையை விற்கும் முடிவை எடுத்திருப்பது கவனிக்கத்தக்கது. டாடா நிறுவனத்தின் இந்த முடிவால் கிட்டதட்ட 15,000 பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ