Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"ஷார்ப்" நிறுவனத்தை கையகப்படுத்தியது "ஃபாக்ஸ்கான்"


ஜப்பானிய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான ஷார்ப் நிறுவனத்தின் பெருமளவு பங்குகளை வாங்கிக்கொள்ள தைவானைச் சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஒப்புக்கொண்டிருக்கிறது.

1912-ம் ஆண்டில் நிறுவப்பட்ட ஷார்ப் நிறுவனம் பெரும் கடனுடன் கிட்டத்தட்ட திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 2.4 பில்லியன் பவுண்டுகள் முதலீடு செய்து, ஷார்ப் நிறுவனத்தில் 66 சதவிகிதப் பங்குகளை வாங்கிக்கொள்ளப் போவதாக ஃபாக்ஸ்கான் தெரிவித்திருக்கிறது.

தொலைக்காட்சி தொழில்நுட்பத்தில் பல முன்னோடி கண்டுபிடிப்புகளை மேற்கொண்ட ஒரு மிகப் பெரிய ஜப்பானிய எலெக்ட்ரானிஸ் நிறுவனமான ஷார்ப் நிறுவனத்தை, ஃபாக்ஸ்கான் நிறுவனம் கையகப்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ