Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

4,000 கோடீஸ்வரர்கள் இந்தியாவிலிருந்து ஓட்டம்!

இந்தியாவிலிருந்து 2015-ம் ஆண்டில் மட்டும் 4,000 பணக்காரர்கள் வெளியேறியுள்ளதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூ வேல்ர்டு வெல்த் என்கிற அமைப்பு உலக அளவில் நாட்டை விட்டு வெளியேறுபவர்களில் எண்ணிக்கை குறித்து கணக்கெடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு வருகிறது. அதன்படி 2015-ம் ஆண்டில் மட்டும் இந்தியாவிலிருந்து 4,000 பணக்காரர்கள் வெளியேறியுள்ளனர். இவ்வாறு நாட்டை விட்டு பணக்காரர்கள் வெளியேறும் நாடுகளில் பட்டியலில் உலக அளவில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளதாக ஒரு அறிக்கை கூறியுள்ளது.

இந்த பட்டியலில் பிரான்ஸ் முதலிடத்தையும், சீனா இரண்டாவது இடத்தையும், இத்தாலி மூன்றாம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. பணக்காரர்கள் சென்று வசிக்க விரும்பும் நாடுகளில் ஆஸ்திரேலியா முதல் இடத்தில் உள்ளது. இதற்கடுத்து அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகள் உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ