Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இன்று வங்கிகள் இரவு 8.00 மணி வரை இயங்கும்! ஆர்பிஐ அறிவிப்பு


வருமான வரி செலுத்துவோர் தங்களது வரிப் பணத்தைச் செலுத்த ஏதுவாக இன்று வங்கிகள் இரவு 8.00 மணி வரை இயங்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

2016 ஆம் நிதியாண்டின் கடைசி நாளான இன்று வருமான வரி செலுத்துவோர் தங்களது வரிப் பணத்தைச் செலுத்த ஏதுவாக அனைத்து வங்கி கிளைகளும் இரவு 8.00 மணி வரையில் முழுமையாக இயங்க வேண்டும் என ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது.

மின்னணு பரிமாற்றம் வழக்கம் போல் இரவு 12 மணி வரையில் செயல்படும் எனவும் ஆர்பிஐ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதுமட்டும் அல்லாமல் வருமான வரி தாக்கல் செய்வதற்காகத் தபால் நிலையங்களும் இன்று 8.00 மணி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது



 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ