Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"எப் அண்ட் ஒ"வால் ஆட்டம் கண்ட இந்திய சந்தை!

இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (31.03.16) மாலை நேர வர்த்தகத்தில் ஏற்ற இறக்கத்தில்  வர்த்தகமாகி இறுதியில் சற்று ஏற்றத்துடன் நிறைவடைந்தது.

இந்திய ரிசர்வ் வங்கி வரும் ஏப்ரல் 5 ம் தேதி நடைபெறும் நிதிக்கொள்கை ஆய்வுக்கூட்டத்தில் வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு காரணமாக கடந்த 2 நாட்களாக சந்தைகள் ஏற்றத்தில் காணப்பட்டது. இந்த நிலையில் இன்றைய  காலை நேர வர்த்தக தொடக்கத்தின்போது மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 120 புள்ளிகளுக்கும் அதிகமாக வர்த்தகமாகி காணப்பட்டது.

இன்று மார்ச் மாதத்திற்கான எப் அண்ட் ஒ எக்ஸ்பியரி இருப்பதால் சந்தைகள் அதன்பின் இறக்கத்தில் சென்றது. சென்செக்ஸ் 30 புள்ளிகளுக்கும் மேல் இறக்கத்தில் இருந்தது. வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் சற்று ஏற்றத்துடன் முடிவடைந்தது.


இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 3.28 புள்ளிகள் உயர்ந்து  25,341.86 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 3.20 புள்ளிகள் உயர்ந்து  7738.40 என்ற நிலையில் வர்த்தகமானது 

விலை அதிகரித்த பங்குகள்

டாடா பவர் 64.65 3.19%
ஜீ எண்டர்டெயின் 386.95 2.76%
இன்டஸ் இன்ட் வங்கி 967.60 2.21%
அல்ட்ராடெக் சிமெண்ட் 3,228.75 1.40%
டிசிஎஸ் 2,520.30 1.24%

விலை குறைந்த பங்குகள்

வேதாந்தா 89.85 -1.96%
கெய்ர்ன் இந்தியா 153.85 -1.79%
ஓஎன்ஜிசி 214.10 -1.74%
எஸ்பிஐ 194.25 -1.67%
கோல் இந்தியா 291.95 -1.65%


 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ