Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு: முத்தான மூன்று வசதிகள்:

எஸ்.டி.பி - STP -  Systematic Transfer Plan


பங்கு சார்ந்த திட்டம் ரிஸ்க்கானதுன்னு முன்னாடியே பார்த்தோம். ஏதோ ஒரு துணிச்சல்ல அதுல பணத்தைப் போட்டுட்டீங்க.

'இதுலேர்ந்து கிடைக்கிற வருமானத்தை கொஞ்சம் கொஞ்சமா ரிஸ்க் குறைஞ்ச பேலன்ஸ்ட் ஃபண்டிலோ இல்லாட்டி கடன் சார்ந்த பாதுகாப்பான வேற முதலீட்டுக்கோ மாத்திக்கலாமா'னு யோசிச்சீங்கன்னா, உங்களுக்காகத்தான் இருக்குது இந்தத் திட்டம்.

ஆனா அப்படி மாற்றும்போது ஒரே மியூச்சுவல் ஃபண்ட் நடத்துற திட்டங்-களுக்குள்ளதான் மாறிக்கமுடியும்.

எஸ்.டபிள்யூ.பி - Systematic Withdrawal Plan



ரிட்டயர் ஆகுற ஸ்டேஜ்... மொத்தமா கையில கிடைக்கிற பணத்தைப் பாதுகாப்பா சேமிச்சு வைக்கணும், அதுலேர்ந்து மாசச் செலவுக்கு ஒரு வருமானமும் வந்துக்கிட்டிருக்கணும்... இதுக்கு ஏற்றது இந்த 'சிஸ்டமேட்டிக் வித்ட்ராவல் பிளான்'. கொஞ்சம் கொஞ்சமா முதலீடு பண்ற எஸ்.ஐ.பி. திட்டத்தோட உல்டாதான் இந்தத் திட்டம். மொத்தமா நாம போடுற முதலீட்டுலேர்ந்து கிடைக்கிற லாபத்தை அப்பப்போ தந்துகிட்டிருப்பாங்க. அல்லது மாசம் இவ்வளவு பணம் வேணும்னு கேட்டா, அதுக்கு ஏத்தாப்ல யூனிட்களை வித்து பணத்தைத் தருவாங்க..!

ஸ்விட்ச் ரிக்வெஸ்ட்  - Switch Request

ஒரு ஃபண்டுல பணத்தைப் போட்டாச்சு. அதுக்குப் பிறகு பார்த்தா, அதே நிறுவனம் நடத்துற வேறொரு ஃபண்ட் இதைவிட நல்ல ரிட்டர்ன் தருது. இப்ப பழைய முதலீட்டை கட் பண்ணிட்டு, புது ஃபண்டுக்கு வந்துட முடியுமா..? முடியும். அதுதான் இந்த ஸ்விட்ச் ரிக்வெஸ்ட்.

மொத்த முதலீட்டையோ, ஒரு பகுதியையோ கூட இப்போ இருக்குற திட்டத்திலேர்ந்து, அதே நிறுவனம் நடத்துற வேறொரு திட்டத்துக்கு மாத்திக்கலாம். நமக்கு அனுப்பப்படுற அக்கவுன்ட் ஸ்டேட்மென்டுல இருக்குற 'ஸ்விட்ச் ரிக்வெஸ்ட்'ங்குற பேர்ல ஒரு ஸ்லிப் இருக்கும். அதை நிரப்பி அனுப்பினாலே போதும்.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ