Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிறு சேமிப்பு திட்டங்களில் வட்டி விகிதம் குறைப்பு.. இன்று முதல் அமல்!

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விட்டி விகிதம் குறைக்கப்பட்டது இன்று முதல் அமலுக்கு வருகிறது.

சிறு சேமிப்பு திட்டங்களில் வட்டி விகிதம் ஒவ்வொரு நிதி ஆண்டுக்கும் ஒரு முறை மாற்றி அமைக்கப்பட்டது. இப்போது அரசாங்க கடன் பத்திரங்களுக்கு ஏற்ப காலாண்டுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாற்றியமைக்கப்பட்ட வட்டி விகிதம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

கிஸான் விகாஸ் பத்திரத்தின் வட்டி விகிதம் 8.7 சதவிகிதத்தில் இருந்து 7.8 சதவிகிதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. மூத்த குடிமக்களுக்கான ஐந்து வருட டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி 9.2 சதவிகிதத்தில் இருந்து 8.6 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.

பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ரிதி திட்டத்தில் செய்யப்படும் டெபாசிட்களுக்கு வட்டி 9.2 சதவிகிதத்தில் இருந்து 8.6 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 தேதி வரையிலான காலத்துக்கு பிபிஎப் வட்டி விகிதம் 8.1 சதவிகிதமாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. முன்னதாக 8.7 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ