Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவில் 7,129 விஜய் மல்லையாக்களாம்.. ஏப்பம் விட்ட தொகை ரூ 70,540 கோடியாம்..!

வங்கியில் பல கோடி கடன் வாங்கி ஏமாற்றிவிட்டதாக நாம் விஜய் மல்லையாவை பற்றி செய்திகளை படித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில், இந்தியாவில் ஏராளமான சொத்துக்கள் இருந்தும், வங்கியில் கடன் வாங்கி அதனை திருப்பி செலுத்த விரும்பாத நபர்கள் மொத்தம் 7,129 பேர் என்பது தெரியவந்துள்ளது.

ரூ.500 கோடிக்கும் மேல் கடன் வாங்கி திருப்பி செலுத்தாதவர்கள் பட்டியலை உச்ச நீதிமன்றத்தில் இந்திய ரிசர்வ் வங்கி சமர்பித்துள்ளது. ஆனால் பட்டியலில் இடம் பெற்று இருப்பவர்களின் பெயர்களை ரகசியமாக வைத்திருக்க ஆர்பிஐ, உச்சநீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கடனை திரும்ப செலுத்தவர்களின் பெயரை வெளியீடும் போது அந்த தொழிலில் பாதிப்பு ஏற்படும் என்பதால் இதற்கான விளக்கத்தை ஆர்பிஐ அளித்து இருந்தது.

இந்த நிலையில் இந்தியாவில் ஏராளமான சொத்துக்கள் இருந்தும் வங்கிக் கடனை திருப்பி செலுத்தாமல் இருக்கும் விஜய் மல்லையாக்களின் எண்ணிக்கை 7,129 என்றும், அவர்கள் ஏப்பம் விட்டிருக்கும் தொகை ரூ.70,540 கோடி என்பது தெரியவந்துள்ளது.

இதில் கடனை திருப்பி செலுத்தாதவர்களின் பட்டியல்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ