Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அக்ரி கமாடிட்டி

ஏலக்காய்!

சென்ற வாரம் கேரள மாநிலத்தில் மிதமான மழை பொழிவு காரணமாக எம்சிஎக்ஸ்-ல் ஏலக்காய்க்கான ஃப்யூச்சர்கள் விலை குறைந்து வர்த்தகமாயின. கேரளா முழுவதும் கடந்த சில நாட்களாக நிலவும் ஒரு வறட்சி நிலை அடுத்த ஆண்டு ஏலக்காய் மகசூலை நேரடியாக பாதிக்கக்கூடும் என்பதுதான் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

ஏப்ரல் மாத ஏலக்காய் ஃப்யூச்சர்ஸ் கிலோ ஒன்றுக்கு 707 ரூபாய்க்கு அதாவது 3.99% விலை இறக்கத்தில் நிறைவடைந்தது. அதே போல், மே மற்றும் ஜூன் மாத ஏலக்காய் ஃப்யூச்சர்கள் 3.98% மற்றும் 2.04% இறக்கத்தில் நிறைவடைந்தன.

அதோடு ஏலக்காயின் கூடுதல் சப்ளை மற்றும் நிதி ஆண்டு முடிவு போன்றவைகள் ஏலக்காயின் விலை இறக்கத்துக்கு மற்ற காரணிகளாக கூறப்படுகின்றன. எனவே, அடுத்த வாரமும் ஏலக்காயின் விலை இறக்கத்தில் வர்த்தகமாகலாம்.

மஞ்சள்!

மஞ்சளுக்கான ஃப்யூச்சர்ஸ் கடந்த வாரம் இறக்கத்தில் வர்த்தகமானது. வாரங்கல், துக்கிராலா, குண்ட்லுபெட் ஆகிய ஸ்பாட் சந்தைகளிலும், என்.சி.டி.இ.எக்ஸ் கிடங்குகளிலும் மஞ்சளின் வரத்து சற்று அதிகமாக இருப்பதால், டிரேடர்களிடையே மட்டுமல்லாமல் மொத்த சந்தையிலும் ஒரு இனம் புரியாத நெகட்டிவ் சென்டிமென்ட் நிலவுகிறது.

எப்ரல் மாதத்திற்கான மஞ்சளின் கான்டிராக்ட் 100 கிலோவிற்கு 8110 ரூபாயாக குறைந்து, அதாவது 3.8% குறைந்து வர்த்தகம் நிறைவடைந்தது. சந்தையில் மஞ்சளுக்கான விலை மற்றும் ஒப்பன் இன்ட்ரெஸ்ட் குறைந்து வரும் போது வால்யூம்கள் மட்டும் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு சந்தையில், டிமாண்டைவிட அதிகமாக மஞ்சளின் வரத்து இருப்பதால் அடுத்த வாரத்திலும் மஞ்சள் பக்கவாட்டில் வர்த்தகமாகவே அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

ஜீரா!

கடந்த வாரம் ஜீராவின் ஏப்ரல் மாத ஃப்யூச்சர்ஸ் 0.5% விலை அதிகரித்து, 100 கிலோவுக்கு (1 குவின்ட்டாலுக்கு) 15,565 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்தது. தற்போது சந்தையில் ஜீராவுக்கான தேவை உள்நாட்டில் அதிகரித்து வருவது,  வெளிநாட்டு தேவைகள் அதிகரிப்பது போன்ற காரணிகள் ஜீராவின் விலையை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது. ஸ்பாட் சந்தையில் தொடர்ந்து ஜீராவுக்கு ஏற்றுமதியாளர்களின் ஆர்டர்கள் குவிந்த வண்ணமே இருக்கின்றன.

ஜீராவின் விலையோடு சேர்ந்து வால்யூம்களும் அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது. எனவே, அடுத்த வாரமும் ஜீராவின் விலை ஏற்றத்திலேயே வர்த்தகமாகலாம். இருப்பினும் தேவைக்கு மீறி ஜீராவின் வரத்து சந்தையில் அதிகரித்தால், விலை குறைய வாய்ப்பிருக்கிறது என்பதை கவனத்தில் கொண்டு வர்த்தகத்தை மேற்கொள்ளவும்.

கொத்தமல்லி!

கடந்த வாரம் கொத்தமல்லிக்கான ஏப்ரல் மாத ஃப்யூச்சர்ஸ் 0.4% குறைந்து குவின்டால் ஒன்றுக்கு 7,073 ரூபாய் என்கிற விலையில் வர்த்தகமானது. கடந்த வாரத்திலேயே கொத்தமல்லியில் டிரேட் செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் பிராஃபிட் புக்கிங் செய்ததால், இந்த இறக்கம் வந்தது என்று கூறப்படுகிறது.
கொத்தமல்லிக்கான விலை, வால்யூம்கள் மற்றும் ஓபன் இன்ட்ரெஸ்ட்கள் என்று அனைத்தும் குறைந்திருக்கின்றன. அதே போல், முதலீட்டாளர்களும் தங்கள் லாங் பொசிஷன்களை விற்று வெளியேறி வருகிறார்கள் என்பது போன்ற விஷயங்கள், கொத்தமல்லிக்கான டவுன் டிரெண்ட் தொடங்கிவிட்டதை அறிவுறுத்துகிறது.

அடுத்த வாரத்தில் கொத்தமல்லி ரேஞ்ச் பவுண்டில் பக்கவாட்டிலேயே வர்த்தகமாக வாய்ப்புள்ளது. கொத்தமல்லிக்கான ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகம் வந்து கொண்டிருக்கிறது என்பது மட்டுமே கொத்தமல்லிக்கு சாதகமான விஷயமாக இருக்கிறது. எனவே, ஜாக்கிரதையாக வர்த்தகங்களை மேற்கொள்ளவும். 

-மு.சா.கெளதமன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ