Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வீட்டுக் கடனுக்கான வட்டி குறைய காரணம் இதுதான்!

வங்கிகள் வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்யும் முறையில் மாற்றம் கொண்டு வந்திருப்பதால் வீட்டுக்கடனுக்கான வட்டி குறைகிறது.

குறுகிய காலம் மட்டுமல்லாமல் ஒவ்வொரு கால அளவிலும் எந்த தொகையில் வங்கிகளுக்கு பணம் கிடைக்கிறது என்பதை அடிப்படையாக வைத்து அடிப்படை வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்ய வங்கிகள் முடிவெடுத்தது. இதற்கு எம்.சி.எல்.ஆர். என்று பெயர்.

முன்பு அடிப்படை வட்டி விகிதத்தில் இருந்து கூடுதலாக கடன்களுக்கான வட்டி நிர்ணயம் செய்யப்பட்டது. இப்போது எம்.சி.எல்.ஆர். அடிப்படையில் கடன்களுக்கான வட்டி நிர்ணயம் செய்யப்படும். வங்கிகள் வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்யும் முறையில் மாற்றம் கொண்டு வந்திருப்பதால் இப்போது வீட்டுக்கடனுக்கான வட்டி குறைகிறது.

எஸ்பிஐ, பேங்க் ஆப் பரோடா, ஐசிஐசிஐ, ஹெச்டிஎப்சி போன்ற வங்கிகள் புதிய வட்டி விகிதத்தை மாற்றி அமைத்திருக்கின்றன.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ