Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஈக்விடாஸ் ஹோல்டிங்ஸ் ரூ. 2,000 கோடிக்கு பங்கு வெளியீடு

சென்னையை சேர்ந்த ஈக்விடாஸ் ஹோல்டிங்ஸ் (Equitas Holdings) நிறுவனம், கிராமம் மற்றும் சிறு கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு சிறிய அளவிலான கடன்களை அளித்து வருகிறது.  இந்த நிறுவனம், அதன் வணிகத்தை விரிவாக்கம் செய்யும் விதமாகவும் செபி அமைப்பின் விதிமுறைகளை பின்பற்றும் விதமாகவும் பங்கு விற்பனையில்  இறங்குகிறது.

இது குறித்து  ஈக்விடாஸ் நிறுவனத்தின்  நிர்வாக இயக்குநர் பி.என். வாசுதேவன் கூறும் போது, '' எங்கள்  நிறுவனத்தில் தற்போது வெளிநாட்டு பங்கு முதலீடு 93% ஆக உள்ளது. இதனை 49 சதவிகிதத்துக்கு கீழ் குறைக்க செபி சொல்லி இருக்கிறது.  அந்த வகையில் சுமார் ரூ. 2,100 கோடிக்கு பங்குகளை விற்பனை செய்கிறது. ஐபிஓக்கு பிறகு இந்த நிறுவனத்தில் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடு 35 சதவிகிதமாக குறைந்து விடும்." என்றார்.

ஐபிஓ ஏப்ரல் 5 ம் தேதி ஆரம்பிக்கிறது. 

ரூ. 10 முக மதிப்பு கொண்ட பங்கு  ஒன்றின் விலை பட்டை ரூ.109-110 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close