Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உற்பத்தித் துறையில் இந்தியா முன்னேற்றம்! உலகளவில் 6 வது இடம்!

உலகளவில் உற்பத்தித் துறையில் இந்தியா முன்னேற்றமடைந்து 6 வது இடத்தைப் பிடித்துள்ளதாக ஐ.நா தொழில் மேம்பாட்டு கழகம் தெரிவித்துள்ளது.

உலகில் உற்பத்தித் துறையில் முன்னணியில் உள்ள பத்து நாடுகளை ஐ.நா தொழில் மேம்பாட்டு கழகம் பட்டியலிட்டுள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் சீனா இருக்கிறது. அடுத்தடுத்த இடங்களில் அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி மற்றும் கொரியா ஆகிய நாடுகள் உள்ளன. இந்த பட்டியலில் இந்தியாவுக்கு 6-வது இடம் கிடைத்துள்ளது. முன்னதாக இந்த பட்டியலில் இந்தியாவுக்கு 9-வது இடம் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2015-ம் ஆண்டு இந்தியாவின் உற்பத்தித் துறை மதிப்பு முந்தைய ஆண்டை விட 7.6 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக இந்த அமைப்பு தெரிவித்துள்ளது. அதேசமயம் சர்வதேச அளவிலான உற்பத்தித் துறையின் வளர்ச்சி 2015-ம் ஆண்டில் 2.8 சதவிகிதம் மட்டுமே இருந்ததாக இந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கு காரணம் முக்கிய நாடுகளில் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருப்பதே என்று ஐ.நா தொழில் மேம்பாட்டு கழகம் தெரிவித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close