Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இ-காமர்ஸ் துறையின் முதல் பொதுப்பங்கு: இன்று பங்கு வர்த்தகம் தொடங்கியது!

இ-காமர்ஸ் துறையின் முதல் பொதுப்பங்கான இன்பிபீம் பங்கு வர்த்தகம் இன்று தொடங்கியது.
2007-ம் ஆண்டு இன்பிபீம் நிறுவனம் தொடங்கப்பட்டது. பொதுப்பங்கு வெளியீடு மூலம் கிடைக்கும் நிதியில் லாஜிஸ்டிக்ஸ் மையம், மென்பொருள் உள்ளிட்டவற்றுக்கு செலவு செய்ய இந்த நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

இ-காமர்ஸ் துறையின் முதல் பொதுப்பங்கு வெளியீட்டை இன்பிபீம் கடந்த மார்ச் 21-23 ஆகிய தேதிகளில் வெளியிட்டது. இந்த நிறுவன பங்குகள் இன்று பங்குச்சந்தை வர்த்தகத்தை தொடங்கின. ஒரு பங்கின் விலை ரூ.457 ஆக தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. பொதுப்பங்கு வெளியீட்டின் மூலம் இந்த நிறுவனம் 450 கோடி ரூபாய் திரட்டியது.

இன்று தொடங்கிய இந்த பங்கின் விலை முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் வாங்கி வருவதால் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகிறது. அதிகபட்சமாக இன்பிபீம் பங்கு ரூ.467க்கு வர்த்தகமாகி வருகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ